search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றி காய்ச்சல் பலி"

    ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. #SwineFlu

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    ஜோத்பூர், கோடா, தவுசா மாவட்டங்களில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று 4 பேர் பலியானார்கள். இதன்மூலம் இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.

    மேலும் 87 பேருக்கு புதிதாக இந்தநோய் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜோத்பூரில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 39 தினங்களில் ராஜஸ்தானில் 2793 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் பன்றி காய்ச்சல் நோய் அதிகரித்து உள்ளது. குஜராத்தில் கடந்த 7-ந்தேதி வரை இந்த நோய்க்கு 54 பேர் பலியாகி உள்ளனர். 1187 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பஞ்சாபில் 30 பேர் பலியாகி உள்ளனர். 301 பேர் பன்றிகாய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் வைரஸ், டெங்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

    பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்களின் கண்காணிப்பில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

    மதுரை மாவட்டம், கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 49). கட்டிட தொழிலாளி. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாண்டியராஜன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அங்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாண்டியராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பேட்டைத்தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி முத்துசெல்வி (32). பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முத்துசெல்வி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பன்றி காய்ச்சல் பாதிப்புள்ள 10 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதே போல் டெங்கு காய்ச்சலுக்கு 8 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 120 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள். #Swineflu #Dengue

    ×